Home சினிமா எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள ‘சிறை’ திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள ‘சிறை’ திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

0

சிறை

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிறை. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் ஆவார்.

விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: வெளிநாட்டில் ஜனநாயகன் முன்பதிவு.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில், சிறை திரைப்படத்தை பார்த்துள்ள தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது சமூக வலைத்தளத்தில் படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

முதல் விமர்சனம்

இதில், ‘சிறை இந்த ஆண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்று. அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி மற்றும் அவரது டீம் சிறப்பாக படத்தை உருவாக்கியுள்ளனர். விக்ரம் பிரபு மற்றும் மற்ற அனைவருடைய நடிப்பும் நன்றாக இருந்தது. அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் தனது திரை வாழ்க்கையை இப்படியொரு படத்தில் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.

இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version