Home சினிமா சித்தாரே ஜமீன் பர்: திரை விமர்சனம்

சித்தாரே ஜமீன் பர்: திரை விமர்சனம்

0

ஆமிர்கான், ஜெனிலியா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.

கதைக்களம்

டெல்லி ஸ்போர்ட்ஸ் அசோசியனில் பேஸ்கட் பால் ஜூனியர் பயிற்சியாளராக இருக்கிறார் ஆமிர்கான். போட்டி ஒன்றின்போது தனது சீனியர் பயிற்சியாளருடன் ஆமிர்கான் வாக்குவாதம் செய்கிறார்.

அப்போது சீனியர் தனது உயரத்தை வைத்து கிண்டல் செய்ய, ஆமிர்கான் சட்டெனெ கன்னத்தில் அறைந்துவிடுகிறார்.

அதன் பின்னர் மதுபோதையில் காரை தாறுமாறு ஓட்டி, போலீஸ் வாகனத்தின் மீது மோதுகிறார்.

இதன் காரணமாக நீதிமன்றத்தில் சிறைக்கு செல்கிறீர்களா அல்லது சமூக சேவை செய்கிறீர்களா என்று நீதிபதி கேட்கிறார்.

தனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி சமூக சேவை செய்ய ஒப்புக்கொள்ளும் ஆமிர்கான், மாற்றுத்திறனாளிகளுக்கு பேஸ்கட் பால் பயிற்சி அனுப்பி வைக்கப்படுகிறார்.

மற்றவர்களை கேலி, கிண்டல் செய்யும் குணமுடைய ஆமிர்கான் மாற்றுத்திறனாளிகளை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயார் செய்ய வேண்டிய பணி கொடுக்கப்படுகிறது.

அதனை அவர் சரியாக செய்து முடித்தாரா? மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் நபராக அவர் மாறினாரா என்பதே மீதிக்கதை.
 

படம் பற்றிய அலசல்

2007ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைபோடுபோட்ட ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் இன்னொரு வெர்சனாக இப்படத்தை இயக்கியுள்ளார் ஆர்.எஸ்.பிரசன்னா.

மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான பல கதைகளில் நடித்துள்ள ஆமிர்கானுக்கு இது சவாலான வேடம் இல்லை என்றாலும், யதார்த்த நடிப்பில் நம்மை கவர்கிறார்.

தனது உயரத்தை கிண்டல் செய்யும் காட்சிகளில் மிகவும் ஸ்போர்ட்டிவ் ஆக நடித்துள்ளார்.

28 Years Later: திரை விமர்சனம்

சாம்பியன்ஸ் என்ற ஸ்பானிஷ் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதால், எமோஷனை விட காமெடிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

என்றாலும் படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கலாம். ஆங்காங்கே எமோஷன்ஸ் நம்மை தொட்டு செல்லும் வகையிலேயே திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் பாதியில் ஜெனிலியாவுக்கு பெரிய வேலை இல்லையென்றாலும், இரண்டாம் பாதியில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

அவரை விட ஆமிர்கானுக்கு அவ்வப்போது அறிவுரை கூறுவதுபோல், உணர்வுகளை புரிய வைக்கும் ரோலில் நடித்துள்ள குர்பால் சிங்தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.

குறிப்பாக, ‘எல்லோருக்கும் ஒரு நார்மல் இருக்கும். உங்களுடையது உங்க நார்மல்’ என்று அவர் எளிதாக கொடுக்கும் விளக்கம் செம டச்.

ஆரம்ப காட்சிகளில் ஆமிர்கான் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவது நெருடல்.

கிளைமேக்சில் முழுதாக அவர்களை புரிந்துகொண்டு ஆமிர்கான் பேசும் வசனம் நம்மை கலங்க வைக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் உலகை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் மிக அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

பேஸ்கட் பால் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றாலும், அதற்கான மெனக்கெடலை நன்றாக காட்டியிருக்கலாம்.

பின்னணி இசை அருமை. தமிழ் டப்பிங்கை மிக கச்சிதமாக செய்துள்ள குழுவை பாராட்டலாம்.  

க்ளாப்ஸ்

கதைக்களம்

ஆமிர்கான்

நடிகர்களின் நடிப்பு

வசனங்கள்

பல்ப்ஸ்

படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்

மொத்தத்தில் ஆமிர்கானுக்கு பேர் சொல்லும் படமாகவும், எல்லா வயதினரும் சிரித்து என்ஜாய் பண்ணும் படமாகவும் கவர்கிறது இந்த ‘சித்தரே ஜமீன் பர்’.

NO COMMENTS

Exit mobile version