இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்றையதினம்
செம்மணியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றவேளை அங்கிருந்த
போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா விளக்கு போராட்டமானது கடந்த
23ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்றுவரை நடைபெற்று வருகிறது.
விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம்
குறித்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர்
சி.வி.கே.சிவஞானம் சென்றவேளை அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்
அவரை ஒருமையில் விழித்து கூச்சலிட்டு அந்தப் பகுதியில் இருந்து அவரை
விரட்டியடித்துள்ளனர்.
இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை,போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோர் வருகைத் தந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடும் அதிருப்தியடைந்து முரண்பட ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
