வல்வெட்டித்துறை நகரபிதா M. K. சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் கடந்த 15 அக்டோபர் 2025 அன்று வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை
மேலும், வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியில் இருந்து விலகிய நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக கடந்த மாதம் 28 ஆம் திகதி தெரிவாகியிருந்தார்.
தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல் நல நிலை குறித்து மேலதிக தகவல்கள் பெறப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
