Home சினிமா அட்டகாசமாக வந்தது சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் அறிவிப்பு… செம கூட்டணி மக்களே, இவங்களும் இருக்காங்களா?

அட்டகாசமாக வந்தது சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் அறிவிப்பு… செம கூட்டணி மக்களே, இவங்களும் இருக்காங்களா?

0

சிவகார்த்திகேயன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் அமரன்.

மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் மாஸ் வரவேற்பை பெற்றது. ரூ. 300 கோடிக்கு மேல் இப்படம் வசூலிக்க அதிகம் கலெக்ஷன் செய்த டாப் நடிகர்களின் லிஸ்டில் இணைந்துவிட்டார்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

புதிய படம்

கடந்த சில நாட்களாகவே சிவகார்த்திகேயன்-சுதா கொங்கரா புதிய படத்தில் இணைகிறார்கள் என்றும் சிலர் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு படம் டிராப் ஆனது என்றும் நிறைய செய்திகள் வலம் வந்தது.

இப்படி செய்திகள் வலம் வர அதிரடியாக புகைப்படத்துடன் சிவகார்த்திகேயன் படத்தின் 25வது பட அறிவிப்பு வெளியாகிவிட்டது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா நடிக்க ஜெயம் ரவி மற்றும் அதர்வா முக்கிய ரோலில் நடிக்கிறார்களாம்.

பட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு Dawn Pictures தயாரிப்பு நிறுவனம் தங்களது டுவிட்டரில் தகவலை வெளியிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version