சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், இந்த ஆண்டு மதராஸி எனும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பராசக்தி. இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வருகிற ஜனவரி 2026ஆம் ஆண்டு 14ஆம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டீசல் படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியின் மூன்று பிள்ளைகளில் மூத்த மகள் ஆராதனா. இவர் சிவகார்த்திகேயனின் கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியிருந்தார்.
ஆராதனா
இந்த நிலையில், இன்று ஆராதனாவிற்கு பிறந்தநாள். ஆர்த்தி சிவகார்த்திகேயன் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதில், ஆராதனாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘அட, ஆராதனாவா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே’ என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்:
