Home சினிமா ப்ரேமலு பட பிரபலத்தை நேரில் சந்தித்தது சிவகார்த்திகேயன்.. இதோ புகைப்படம்

ப்ரேமலு பட பிரபலத்தை நேரில் சந்தித்தது சிவகார்த்திகேயன்.. இதோ புகைப்படம்

0

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தான் தனது அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தை முடித்த கையோடு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

ப்ரேமலு 

இந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று ப்ரேமலு. காதல் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தில் மமிதா பைஜூ, நஸ்லன், சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் அனைவராலும் ரசிக்கப்பட்ட அமல் டேவிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சங்கீத் பிரதாப்.

இந்த நிலையில் நடிகர் சங்கீத் பிரதாப் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-met-premalu-movie-actor-1720075505

NO COMMENTS

Exit mobile version