Home உலகம் அமெரிக்காவில் விசித்திர வடிவமைப்புடன் சென்ற கார்: குழப்பத்தில் மக்கள்

அமெரிக்காவில் விசித்திர வடிவமைப்புடன் சென்ற கார்: குழப்பத்தில் மக்கள்

0

அமெரிக்காவின் வீதியோரங்களில் நுட்பமான  வடிவமைப்புடன் பயணித்த காரின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த காணொளியில், கார் தலைகீழாக கவிழ்ந்து சக்கரங்கள் மேலே இருக்கும் நிலையில், காரை சாரதி வழக்கம் போல ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன.

வைரலாகும் காணொளி

சக்கரங்கள் மட்டுமின்றி கார் எண் உட்பட அனைத்துமே தலைகீழாக இருக்கும் நிலையில், பார்ப்பதற்கு தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் காரை எப்படி ஓட்டி செல்கிறார்? என்று பயனர்கள் திகைப்படையும் வகையில் காணொளி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற இந்த காணொளியை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சில பயனர்கள், வித்தியாசமான வடிவமைப்பிற்காக கார் உரிமையாளரை பாராட்டினர்.

இதேவேளை, சில பயனர்கள், பொதுமக்களை குழப்பும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர். 

Source: https://ibctamil.com/article/car-strange-design-on-american-roads-viral-video-1714161627

NO COMMENTS

Exit mobile version