குடிபோதையில் வாகனம் செலுத்தி வனவிலங்கு அதிகாரிகள் போல் நடித்து காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குநித்த சந்தேக நபர்கள் இன்று (25) கிரிந்த (Girinda) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிரிந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று தமக்கு முன்னால் வந்த வான் ஒன்றை நிறுத்துமாறு சைகை செய்த போதும் அதனை பொருட்படுத்தாமல் வான் முன்னோக்கிச் சென்றுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகள்
பிறகு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தாங்கள் வனவிலங்கு அதிகாரிகள் எனக் கூறி காவல்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
விசாரணைகளின் போது குறித்த குழுவில் ஐவர் தன்னார்வ வழிகாட்டிகள் என்பதும் ஒருவர் வனவிலங்கு சாரதி என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் கைது செய்யப்படும் போது, அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாகவும், அப்போது கைது செய்யாமல் இருந்திருந்தால், உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், காவல்துறையினர் தெரிவித்தனர்.