Home இலங்கை சமூகம் பேய் மாளிகைகளில் நடக்கும் கொடூரங்கள்: முன்னெடுக்கவுள்ள ஆய்வு நடவடிக்கைகள்

பேய் மாளிகைகளில் நடக்கும் கொடூரங்கள்: முன்னெடுக்கவுள்ள ஆய்வு நடவடிக்கைகள்

0

பேய் வீடுகள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில்  ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ( Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.

அதற்கான குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

வெசாக் மற்றும் பொசன் காலங்களில் பொழுதுபோக்கிற்காக பல்வேறு பிரதேசங்களில் பேய் வீடுகள் கட்டப்பட்டுள்ளதுடன், அவ்வாறான இடங்களில் இருந்து பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சரீரப் பிணை

காதலனுடன் பேய் வீடு ஒன்றுக்கு சென்ற பெண்ணொருவர் சவப்பெட்டியில் சடலமாக நடித்த தனது கணவருடன் முரண்பட்ட சம்பவம் நவகமுவ பகுதியில் இருந்து நேற்று முன்தினம் (24) பதிவாகியுள்ளது.

மனைவியை அடையாளம் கண்டுகொண்ட அவர் சவப்பெட்டியில்லிருந்து இருந்து எழுந்து அவரை தாக்க முயன்றதால் குறித்த இடத்தில் கலகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது 12 நபர்கள் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 12 பேரையும் 2000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபானம்

அத்துடன், குடிபோதையில் இருந்த மூவர் பேய் வீட்டினுள் புகுந்து, பிசாசாக வேடமிட்டு வந்த 13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய சம்பவம் ஒன்று களுத்துறை (Kalutara), பல்பொல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

மேலும், பொசன் பொன் பண்டிகையை முன்னிட்டு பண்டாரகமவில் (Bandaragama) நடைபெற்ற பேய் வீடு ஒன்றில் பேய் வேடம் அணிந்த நபர் ஒருவர் சட்டவிரோத மதுபானத்துடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கையில் (Sri Lanka) உள்ள சிங்கள ஊடகம் ஒன்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் வினவிய போது, ​​ இந்த சம்பவங்கள் தொடர்பில் ஆராய குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version