கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில் சுருக்குவலை தொழிலில்
ஈடுபட்டிருந்த ஆறு பேரை 14நாள்விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐந்து மீன்பிடி படகு, இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர்
நேற்றுமுன்தினம் (21.05.2025) கைது
செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்
தொழில் இடம்பெறுவதாக கடற்தொழில் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய
தகவலையடுத்து ஆறு
பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட ஆறுநபர்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்
முற்படுத்தப்பட்டபோது ஆறு பேரையும் 14நாள் விளக்கமறியலில் வைக்குமாறு
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புத்தள மாவட்டத்தை சேர்ந்த ஐந்து நபர்களும் கொக்குதொடுவாய் பகுதியை சேர்ந்த
ஒருவருமாக ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
