Home இலங்கை சமூகம் ஹோட்டல் அடித்தளம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் படுகாயம்

ஹோட்டல் அடித்தளம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் படுகாயம்

0

பாதுகாப்பற்ற வர்த்தக நிலையம் ஒன்றில் உணவு வாங்கச் சென்ற 6 மாணவர்கள் மீது அடித்தளம் இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது இன்று (18.1.2025) காலை கினிகத்தேனை நகரில் உள்ள பாதுகாப்பற்ற வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பகமுவ கல்லூரியின் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 6 மாணவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

மேலதிக விசாரணை

கினிகத்தேன நகரில் உள்ள வெளி வகுப்பில் கலந்து கொள்வதற்காக உணவு எடுப்பதற்காக இந்த ஹோட்டலுக்கு சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஹோட்டலின் பாதுகாப்பற்ற அடித்தளத்தில் தங்கியிருந்தபோது, மரத்தளம் இடிந்து விழுந்து ஆறு மாணவர்களும் சுமார் 15 அடி சாய்வில் கீழே விழுந்ததாக காவல்துறை கூறுகிறது.

பிரதேசவாசிகளால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விடுதியை மூடிய கினிகத்தேன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version