Home இலங்கை சமூகம் கடந்த ஒரு நாளில் ஆறு காட்டு யானைகள் மரணம்

கடந்த ஒரு நாளில் ஆறு காட்டு யானைகள் மரணம்

0

கடந்த 24 மணி நேரத்தில் குருநாகல் உட்பட நாட்டின் பல பகுதிகளில் 6 காட்டு
யானைகள் உயிரிழந்திருப்பதாக வனவிலங்கு பாதுகாப்பு சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதில், கொழும்பு – கோட்டை முதல் அநுராதபுரம் வரை பொருட்களை ஏற்றிச் சென்ற
தொடருந்துடன் மோதியதில், கல்கமுவ வனப்பகுதியிலிருந்து உணவு தேடி கிராமத்திற்குள்
நுழைய முயன்ற யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை உயிரிழந்துள்ளது.

இதனை தவிர ஏனைய 5 யானைகளும் உயிரிழந்த காரணங்கள் வெளியாகவில்லை.

அதேநேரம், பொலன்னறுவை, எலஹெர, அத்தனகடவல, மடுதமன பிரதேசத்தில் இன்று (28.10.2025) அதிகாலை
ஒரு காட்டு யானை வீடொன்றைத் தாக்கியுள்ளது.

40 வீடுகளுக்கும் மேல் சேதம்

அந்த யானை வீட்டில் இருந்த மூன்று நெல் மூட்டைகளை உணவாக உட்கொண்டதாகப் பிராந்திய
செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் இதுவரை சுமார் 40 வீடுகளுக்கு மேல் காட்டு யானைத் தாக்குதல்களால்
சேதமடைந்துள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version