Home உலகம் இந்தியாவுக்கு எதிரான ட்ரம்ப் நடவடிக்கைக்கு கடும் விமர்சனம்

இந்தியாவுக்கு எதிரான ட்ரம்ப் நடவடிக்கைக்கு கடும் விமர்சனம்

0

அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தலைமையிலான நிர்வாகத்தின் இந்தியாவிற்கு (India) எதிரான நடவடிக்கைக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

அமெரிக்க முன்னாள் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ததற்காக டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது ஐம்பது வீத வரிகளை விதித்து நடவடிக்கை எடுத்தார்.

கடும் எதிர்ப்பு 

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது ஜினா ரைமண்டோவும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் நட்பு நாடுகளை எரிச்சலூட்டி வருகின்றார்.

இந்தியாவுக்கும் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் மிக பெரிய தவறு செய்தது.

வலுவான உறவு

அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு நல்ல கூட்டாளியாகவோ அல்லது நண்பராகவோ இல்லாவிட்டால் அது பலவீனமாகிவிடும்.

அமெரிக்கா தனியாக இருப்பது ஒரு பேரழிவை ஏற்படுத்தும்.

ஐரோப்பா அல்லது தென்கிழக்கு ஆசியாவுடன் வலுவான உறவுகள் இல்லாமல் அமெரிக்க நிர்வாகம் திறம்பட செயல்பட முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version