Home இலங்கை அரசியல் மூன்று வாரங்களில் அறுபது கோடி கடன் : சாதனை படைத்த அநுர

மூன்று வாரங்களில் அறுபது கோடி கடன் : சாதனை படைத்த அநுர

0

தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர் மனுஷ நாணயக்கார(manusha nanayakkara) தெரிவித்துள்ளார்.

காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) செயற்பாடுகளையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும்(anura kumara dissanayake) பின்பற்றுகிறார்.

உகண்டாவில் ராஜபக்சாக்களின்பணம் 

ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும், உகண்டாவில் ராஜபக்சாக்களின்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தேர்தல் மேடையில் கூறியதாகவும், ஆனால் தற்போது இல்லை என கூறுகின்றனர்.

இன்று தேசிய மக்கள் படையை சேர்ந்த யாரும் இது பற்றி பேசுவதில்லை என்றார்.

03 வாரங்களில் அறுபதாயிரம் கோடி

இலங்கையில் குறுகிய காலத்தில் அதிக கடன்களை பெற்று 03 வாரங்களில் அறுபதாயிரம் கோடி கடனை பெற்ற ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க மாறியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.  

NO COMMENTS

Exit mobile version