Courtesy: Sivaa Mayuri
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம், பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும் பட்சத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் (Anura Kumara Dissanayaka) ஒத்துழைக்கும் என்று அதன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிவிப்பானது நேற்றைய தினம் (02.09.2024) விடுக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பணிகளுக்கு இடையூறு
தமது தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும், அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி பதவியை வகிக்கும் அதே கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற மக்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் என்று கருத்துரைத்துள்ளனர்.