Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சியில் பலரின் பதவி பறிபோகும் அபாயம்

எதிர்க்கட்சியில் பலரின் பதவி பறிபோகும் அபாயம்

0

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை (SJB) மறுசீரமைக்க அதன் முக்கிய தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பலத்த பின்னடைவைச் சந்தித்தது தொடக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பல்வேறு முரண்பாடுகளும் நெருக்கடிகளும் தோன்றியுள்ளன.

இந்நிலையில் அக்கட்சியை மறுசீரமைத்து பழைய வலுவான நிலைக்குக் கொண்டு வர அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பலரின் பதவி

அதன் ஒரு கட்டமாக மிக விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பழைய அமைப்பாளர்கள் பலரின் பதவி பறிக்கப்படவுள்ளது.

செயற்திறனற்ற மற்றும் செயற்பாட்டுத்திறன் அற்ற அமைப்பாளர்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக செயற்திறன் கொண்ட புதிய அமைப்பாளர்களை நியமிக்கவும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.  

கட்சியின் தலைமைத்துவம்

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரைவில் தலைமைத்துவ மாற்றத்திற்கான போராட்டத்தைத் தொடங்குவார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார்.

இதனால் கட்சி வெற்றிப் பாதையில் செல்லும் என்றும் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்;டு குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்துக்கு சென்று திரும்பும் போதே அவர் இந்த கருத்தை நேற்று வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version