Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். (Jaffna) மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல்
காரியாலயம் இன்று (31) பிற்பகல் சாவகச்சேரி – மட்டுவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்விற்கு ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ்
தலைமையில் இடம்பெற்றுள்ளது. 

கலந்து கொண்டோர் 

இதன்போது, எதிர்க்கட்சி தலைவரும் 2024ஆம் ஆண்டிற்கான
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கலந்து கொண்டு தேர்தல்
காரியாலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்திருந்தார்.

மேலும், நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விரான் விக்ரமரட்ண, மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த
முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version