இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் எந்தக் கட்சி வெற்றியீட்டும் என்பது குறித்து கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார கொள்கை நிறுவகம் (Institute for Health Policy’s (IHP)) இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பின் மூலம் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சஜித் தரப்பு
அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவு 38 வீதமாக அதிகரித்துள்ளதுடன் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு 35 வீதமாக காணப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கான ஆதரவு 8 வீதமாகவும் ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவு 5 வீதமாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு சற்று வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவு சற்று அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த மார்ச் மாதம் சுமார் 16671 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸாருக்கு சட்டத்தரணிகள் இடையூறு செய்யக் கூடாது: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
பணமோசடி விவகாரம்: மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |