Home இலங்கை அரசியல் திடீரென பதவி விலகிய சஜித் கட்சியின் வெலிகம அமைப்பாளர்

திடீரென பதவி விலகிய சஜித் கட்சியின் வெலிகம அமைப்பாளர்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளரும், வெலிகம நகரசபை முன்னாள்
தலைவரும் ரெஹான் ஜயவிக்ரம அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

கட்சியின் தற்போதைய திசைக்கும், தனது தனிப்பட்ட அரசியல் கருத்துக்களுக்கும்
ஒத்திசைவு இல்லாத காரணத்தினால், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சுயாதீனமான பாதை

இது தொடர்பாக டிசம்பர் 6ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாசவுக்கு அவர் எழுதிய , 2 கடிதத்தில், “நான் சுயபரிசோதனை செய்யவும்,
சவால்களை எதிர்கொள்ளவும், ஒரு சுயாதீனமான பாதையில் செல்லவும் இதுவே சரியான
நேரம்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் கட்சியிலிருந்து தாம் விலகினாலும் அரசியலில் தொடர்ந்து ஈடுபடப்
போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு மனமார்ந்த, நேர்மையான மற்றும் பொறுப்புடன் சேவை செய்யத் தனக்கு
அவசியம் என தான் கருதும் விடயங்களின் அடிப்படையிலேயே இந்தத் தனிப்பட்ட முடிவை
எடுத்ததாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

[XEJLOLD

NO COMMENTS

Exit mobile version