Home ஏனையவை வாழ்க்கைமுறை கோடையில் சரும வறட்சியால் பாதிக்கப்படுகின்றீர்களா! இதை முயற்சி செய்து பாருங்கள்…

கோடையில் சரும வறட்சியால் பாதிக்கப்படுகின்றீர்களா! இதை முயற்சி செய்து பாருங்கள்…

0

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவரும் தங்கள் முகத்தில் தனிக்கவனம் எடுப்பது இயல்பு.

இதற்காக தற்போதைய கால கட்டத்தில் பல கிறீம்களை பூசி நிரந்தர அழகினை இழக்கின்றனர்.

அவர்களுடைய சருமத்தை இயற்கையாகவே எளிய முறையில் பராமரிக்க முடியும்.

முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா! இந்த மூன்று பொருட்கள் போதும்..

சருமத்தின் அழகு

தற்போது கோடை காலம் நிலவி வருவதால் பலருடைய சருமம் பல பாதிப்பிற்கு உள்ளாகும்.

எனவே அடிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை எப்படி இலகுவான முறையில் பாதுகாக்கலாம் என பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே எமது உடலை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

எனவே தேங்காய் எண்ணெய்யுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தி இயற்கையான முறையில் எவ்வாறு சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம் என பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்

உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயின் துளியை எடுத்து தோலில் 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும்.

மசாஜ் செய்து 10 நிமிடத்திற்கு அப்படியே வைக்கவும்.பின் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து, ஒரு நாளைக்கு இரு முறை இவ்வாறு செய்யலாம்.

தேங்காய் எண்ணெய்யுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் சருமத்தில் நல்ல மாற்றம் ஏற்படலாம்.

தேங்காய் எண்ணெய் சர்க்கரை + மஞ்சள் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து வெதுவெதுப்பான நீரில் அதை கழுவவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் நல்லது.

கற்றாழை

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சேர்த்து சருமத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு வைத்து பின்னர் கழுவலாம்.

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கற்றாழை சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே முகத்தை கழுவினால் முகம் ஈரப்பதமாகி பளபளவென காணப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version