Courtesy: Sivaa Mayuri
இலங்கையும், தனியார் இறையாண்மை கடனளிப்பவர்களும் $12 பில்லியன் டொலர் பத்திர மறுசீரமைப்பிற்கான விதிமுறைகளில் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
இந்தநிலையில், இரண்டு தரப்புகளும் விரைவில் உடன்பாட்டில் கையெழுத்திடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
28% பெயரளவு குறைப்பு
இதன்படி, பொருளாதார செயல்திறனுடன் இணைக்கப்பட்ட கட்டமைப்பை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்திற்கு, பத்திரதாரர்களும், இலங்கையும் ஒப்புக்கொண்டதாக, இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில் நேற்று(03) புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஒப்பந்தம் இலங்கை மற்றும் அதன் பத்திரப்பதிவுதாரர்களுக்கு இடையே ஒரு வருடத்திற்கும் மேலான கடினமான பேச்சுவார்த்தைகளின் உச்சத்தை குறிக்கிறது.
அறிக்கையின்படி, முதலீட்டாளர்கள், கட்டமைப்பின் ஒரு பகுதியாக பத்திரங்களில் 28% பெயரளவு குறைப்பை எடுக்க ஒப்புக்கொண்டனர்.
அத்துடன், கடந்த வட்டியில் 11 சதவீதம் குறைப்பு மற்றும் செப்டம்பரில் வட்டி செலுத்துதல் ஆரம்பமாகும் போன்ற இணக்கங்கள் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.