Home இலங்கை அரசியல் ஈஸ்டர் தாக்குதல்: சி.ஐ.டியின் திரிபோலி படைப்பிரிவை குற்றம்சாட்டும் தமிழ் எம்.பி!

ஈஸ்டர் தாக்குதல்: சி.ஐ.டியின் திரிபோலி படைப்பிரிவை குற்றம்சாட்டும் தமிழ் எம்.பி!

0

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், இதனை மேற்கொண்ட தரப்பினர் 2005 ஆம் ஆண்டு முதல் நாட்டில் செயல்பட்டு வந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.   

இதன்படி, குற்றப்புலனாய்வு பிரிவின் தலைமையில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயல்பட்டு வந்த திரிபோலி படைப்பிரிவின் அதிகாரிகள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாமென அவர் குறிப்பிட்டுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதே, சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே பல விவாதங்கள் இந்த நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளன.

கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய

எதிர்வரும் நாட்களில் மேலும் பல விவாதங்கள் நடத்தப்படும். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் விவாதங்கள் நடத்தப்பட்டாலும் இந்த விவகாரம் தீர்வின்றி தொடர்வது கவலையளிக்கின்றன.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், இதனை மேற்கொண்ட தரப்பினர் 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலேயே இருந்தார்கள்.

திரிபோலி படைப்பிரிவினர்

நாம் இது தொடர்பில் பலமுறை அறிவித்துள்ளோம். எனினும், இதனை எவரும் பொருட்படுத்தவில்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவமொன்று தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்துள்ளனர்.

பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்: அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

காத்தான்குடியில் இரண்டு முஸ்லீம் குழுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த 2004 – 2005 ஆம் ஆண்டு முதல் திரிபோலி படைப்பிரிவினர் (Tripoli Platoon) வழிநடத்தப்பட்டனர். சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் ஆகிய மூன்று தரப்பினரையும் குறிவைத்து இந்த படைப்பிரிவு செயல்பட்டது.

தொடரும் குற்றச்செயல்கள் 

இந்த படைப்பிரிவினரின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாஹிஸ் எனும் அதிகாரி தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயமான இளைஞன்

குறித்த நபர் இமானிய நெஞ்சங்கள் எனும் இஸ்லாமிய அமைப்பை உருவாக்குவதன் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தார்.

அத்துடன், கலீல் என கூறப்படும் நபர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மரணத்துடன் தொடர்புடையவர். இவரும் திரிபோலி படைப்பிரிவின் ஒரு உறுப்பினர்.

இவ்வாறாக திரிபோலி படைப்பிரிவினருடன் தொடர்புடைய நபர்கள் மேற்கொள்ளும் குற்றச்செயல்கள் மற்றும் கொலைகள் குறித்து யாரும் தேடிப்பார்ப்பதில்லை” என தெரிவித்தார். 

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் முரண்பாடு: ஒருவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version