Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி வெளியிட்ட தகவல்

0

இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகவும் சீர்திருத்தங்களை தொடர்வது அவசியம் எனவும் உலக வங்கி (World Bank) தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் இலங்கையின் அபிவிருத்தி இற்றைப்படுத்தலில் (Sri Lanka Development Update – SLDU), எதிர்கால வாய்ப்புகள் என தலைப்பிடப்பட்ட வெளியீட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் 2024 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி முன்னைய எதிர்வுகூறல்களை விட இது முன்னேற்றகரமான நிலையென குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலாத்துறையில் முன்னேற்றமும்

தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் நான்கு காலாண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் முக்கியமான கட்டமைப்பு மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுமே இதற்கு காரணம் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் பொருளாதார மீட்சி இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் நுண்பொருளாதார ஸ்திரதன்மையை பேணுதல், கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்வது, வருமானத்தை அதிகரித்து வறுமையை குறைப்பதற்காக கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுப்பது ஆகியவற்றிலேயே பொருளாதார மீட்சி தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version