Home இலங்கை அரசியல் முன்னாள் அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

0

இலங்கையின் முன்னாள் அமைச்சர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு மீண்டும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் 28 அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியு்ளளார்.

அனைத்து கட்டணங்கள்

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளை ஒப்படைக்கும் போது, ​​மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டண மிகுதிகளை செலுத்துவது கட்டாயம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்ட பின்னரே அரச குடியிருப்புகளை கையகப்படுத்துமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தொடர்ந்தும் அமைச்சின் அறிவிப்பை தவிர்க்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version