Home இலங்கை சமூகம் நாட்டிற்கு 10 பில்லியன் டொலர் வருமானம் – அரசு நடவடிக்கை

நாட்டிற்கு 10 பில்லியன் டொலர் வருமானம் – அரசு நடவடிக்கை

0

அடுத்த வருடம் இலங்கைக்கு (Sri lanka) வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மீதான விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்று (4.12.2024) கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க (Ruwan Chaminda Ranasinghe) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பில்லியன் டொலர் 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் ஐந்து பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில், Nation Branding campaign என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் 2030 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக உயர்த்தி 10 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version