Home இலங்கை சமூகம் யுத்த வடுக்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யுத்த வடுக்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக நீதி வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து கணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் எட்டு மாவட்ட  தலைவிகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இறுதி யுத்தம்

குறித்த அறிக்கையில், இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் இங்கையில் தமிழ் மக்களின் இருப்பை தீர்மானிக்க சர்வதேச நீதி அவசியமானது என புலம்பெயர் தமிழ் மக்களும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version