Courtesy: Sivaa Mayuri
மாத்தளை (Matale) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கடிதத்துக்கு, எதிர்ப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், குறித்த கடிதம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களை டிசம்பர் 31ஆம் திகதிக்குள் ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தி குறித்த கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த கடிதத்திற்கு எதிரப்பு வெளியிடப்பட்டதை அடுத்து அது மீளப்பெறப்பட்டுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
இதுபோன்ற அடக்குமுறை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்று மருத்துவ துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, 60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், ஜனவரி 2025ஆம் ஆண்டுக்கு பின்னரும், பணியாற்றும் நிலையில், ஏதேனும் முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டால், அவற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார நிறுவனத் தலைவர்களுக்கு இந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63ஆக நீடித்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு இந்த கடிதம் முரணாக வெளியிடப்பட்டதாக மருத்துவத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீதிமன்றத்தின் முடிவைப் பிரதிபலிக்கும் உத்தியோகபூர்வ சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சகம் வெளியிடத் தவறியதால் இந்த உத்தரவு மீறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.