நாட்டில் தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளமை குறித்து கொழும்பு வாழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
மக்களின் அன்றாட தேவைக்களில் ஒன்றான தேங்காய் தற்போது 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறியுள்ளனர்.
நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதாக தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய போதிலும் இதுவரை சரியான தீர்வு வழங்காமை குறித்து மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இதற்கான உடனடி தீர்வை அநுர அரசாங்கம் பெற்று தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
https://www.youtube.com/embed/wkAPcuMalhk