ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் முறைகேடுகள் திருத்தபடாவிடின் போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் விடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் புதன்
கிழமை நான்காம் திகதி காலை பத்து மணியளவில் ஆளுநர் அலுவலகம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக சபை
உறுப்பினர்கள் மற்றும் கல்வி திணைக்களத்தின் இடமாற்ற கொள்கையால்
பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வெளி மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணியாற்றுவதனை தடுப்பது சங்கத்தின் நோக்கமல்ல எனவும் ஆசிரியர்கள் ஏமாற்றபடாது
வெளிமாவட்டங்களில் அவர்கள் ஆற்றவேண்டிய காலத்தை வரையறுக்குமாறும் குறித்த
கூட்டத்தில் தொழிற்சங்க தீர்மானம் தொடர்பில் பிரஸ்தாபிக்கபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு சங்கத்தினர் கருத்து தெரிவித்ததுடன் மேற்படி போராட்டம் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
