Home இலங்கை அரசியல் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி: முன்னாள் எம்பி குற்றச்சாட்டு

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி: முன்னாள் எம்பி குற்றச்சாட்டு

0

சிறிலங்கா அதிபர் தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயங்குகிறது. அதனாலேயே தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டில் அதிபர் தேர்தல் (Presidential Election) இடம்பெற்றால் தற்போதைய அதிபர் உட்பட அவரது ஆதரவாளர்களும் வீடு செல்ல வேண்டி ஏற்படும்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது. நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து கட்டியெழுப்புவதற்கான எந்தவித வேலைத்திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம்

நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் இடம்பெறுவதுடன் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (National People’s Power) வெற்றிபெறும்.

எமது ஆட்சியில் சர்வதேச நாணய நிதியத்துடனான (International Monetary Fund) ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும்.

நாட்டிற்கு பொருத்தமான வகையிலேயே ஒப்பந்தங்கள் அமைய வேண்டும்“ என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version