Home இலங்கை சமூகம் வடமராட்சி கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

வடமராட்சி கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

0

வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் இரண்டு நாட்கள் பருத்தித்துறைக் கடலில் சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் கடற்றொழிலாளர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய
இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான P475, P481 ஆகிய
கலங்களில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம்
நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் இந்த
அறிவித்தலை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 24.01.2025 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை
23.2NM north east of ppd
Coordinate (s)of the location
09°55’N:080°42E
09°55N:080°36E
09°51N:080°42E
09°51N:080°36E. ஆகிய கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் 27.01.2025 அன்று காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00
மணிவரை
23.2NM north east of ppd
Coordinate (s)of the location
09°55’N:080°42E
09°55N:080°36E
09°51N:080°42E
09°51N:080°36E.ஆகிய குறித்த கடற்பரப்புகளில் உள்நுழைந்து மீன்பிடி
நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version