Home இலங்கை அரசியல் காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு

காலி மாவட்டத்தை தன்வசப்படுத்திய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு

0

காலி மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 406,428 வாக்குகளைப் பெற்று மொத்தம் 7 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 93,486 வாக்குகளை காலி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தினை பெற்றுள்ளனர்.

இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 31,201 வாக்குகளை காலி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 1 ஆசனத்தினை பெற்றுள்ளனர்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சி 30,453 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் வெற்றிகொள்ளவில்லை.

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காலி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 430,334 வாக்குளையும் 7 ஆசனங்களையும் காலி மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் காலி மாவட்டத்தில் 115,456 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் காலி மாவட்டத்தில் 29,963 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, காலி மாவட்டத்தில் 18,968 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.

காலி மாவட்டம் – கரந்தெனிய தேர்தல் தொகுதி

காலி மாவட்டத்தின் கரந்தெனிய தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 35,787 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 6,649 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,258 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,125 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் – ஹினிதும

காலி மாவட்டத்தின் ஹினிதும தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 40170  வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 15498  வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3320 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3044  வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் – எல்பிட்டிய

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39475 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9326  வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2249  வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3163 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் – பத்தேகம

காலி மாவட்டத்தின் பத்தேகம தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 41294 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12413 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3967 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3558 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் – ரத்கம

காலி மாவட்டத்தின் ரத்கம தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 33,113 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 7,083 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,408 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,751 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் – அபராதுவ 

காலி மாவட்டத்தின் அபராதுவ தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 38,080 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 7,964 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,217 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,116 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் – அம்பலாங்கொடை

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 36,196  வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 7,536 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,047 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 30,75 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்டம் – அக்மீமன

காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 48629 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8496 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 5008 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4153 வாக்குகளைப் பெற்றுள்ளது

காலி மாவட்டம் – பலபிட்டிய

காலி மாவட்டத்தின் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 2,1681 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 5,588 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,471 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,318 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி – காலி தேர்தல் தொகுதி

காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39,707 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,410 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,741 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,885 வாக்குகளைப் பெற்றுள்ளது.

காலி மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 32,296 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,523 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,964 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,846 வாக்குகளைப் பெற்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version