Home இலங்கை அரசியல் அல்லோலப்படும் நாட்டு மக்கள்…! நகைச்சுவை காட்டி திரியும் சில அரசியல் தலைமைகள்

அல்லோலப்படும் நாட்டு மக்கள்…! நகைச்சுவை காட்டி திரியும் சில அரசியல் தலைமைகள்

0

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் பல நகைச்சுவையான அரசியல் தலைமைகளை நாடு கொண்டிருப்பதை திரையிட்டு காட்டியுள்ளது.

காரணம், சில அரசியல் தலைமைகள் அனர்த்தத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதை விட்டு விட்டு ஆளுக்கொரு பக்கம் ஆட்சியை பிடிக்க ஓரே ஓட்டத்தில் உள்ளனர்.

இதற்காக சில அரசியல் தலைமைகள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எடுத்து வைக்கும் சில கருத்துக்கள் ஒரு ஆளுமையுள்ள அரசியல் தலைமை இப்படியா சிந்திப்பார் என்ற ரீதியில் கேள்விகளை எழுப்ப வைக்கின்றது.

உதாரணமாக, 

  1. கடந்த அனர்த்தத்தில் நூடில்ஸ் வாங்கிகொடுத்ததுக்கு கணக்கு காட்டாத அரசாங்கம்
  2. நிலம் விரிசல் அடைந்ததற்கு காரணமான அரசாங்கம்.
  3. அனர்த்தத்தை கைாயாள தெரியாத அரசாங்கம்.

என நாட்டில் ஒரு இயற்கை அனர்த்தம்தான் ஏற்பட்டது என்பதை மறந்து சிலர் அரசியல் இலாபத்திற்காக விமர்சிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான கருத்துக்களை நாட்டு மக்கள் மிகவும் கவனத்தில் கொள்வதாக நினைத்து சில அரசியல் தலைமைகள் கருத்து தெரிவின்ற அதேவேளை, மக்கள் சமூக வலைதளங்களில் குறித்த கருத்துக்களை மிகவும் நகைச்சுவைக்குள்ளாக்கி பகிர்ந்து வருகின்றனர்.

இது மட்டுமன்றி மக்களுக்காக களத்தில் நிற்பது போல காணொளிகளை வடிவமைத்து பின்ணணியில் பாடல்களை இணைத்து சில அரசியல் தலைமைகள் வெளியிடும் காணொளிகளும் மிகவும் விமர்சனங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு  இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் இருக்கும் போது ஆளும் கட்சி, எதிர்கட்சி மற்றும் ஆட்சி என்பதை தாண்டி அங்கு மக்கள் என்ற ஒரு கட்டமைப்பு குறித்தே ஒரு அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.

ஆனால், இங்கு அதனை தாண்டி இந்த சூழலிலும் கூட மக்களை வைத்து அரசியல் ஆட்டம்தான் ஆடப்பட்டு வருகின்றது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு, நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல், அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் பலதரப்பட்ட அரசியல்சார் விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி,  

https://www.youtube.com/embed/0toM6IuBRqg

NO COMMENTS

Exit mobile version