Home இலங்கை அரசியல் தேசிய பிரச்சினைகளில் கவனத்தை செலுத்துங்கள்! ஹர்ஷ வலியுறுத்து

தேசிய பிரச்சினைகளில் கவனத்தை செலுத்துங்கள்! ஹர்ஷ வலியுறுத்து

0

ஒருவரின் உடையில் ஏற்பட்ட தற்செயலான பிரச்சினைக்காக அவர்களைப் பார்த்து சிரிக்கும், முன்பு தேசிய பிரச்சினைகளில் கவனத்தை செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விடயத்தை தனது எக்ஸ் தள பதிவின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது சட்டையில் உள்ள பொத்தான்களை சரிசெய்யும் சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பொத்தான்களை சரிசெய்யும் காணொளி

பின்னர், அவர் பொத்தான்களை சரிசெய்யும் காணொளியும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே ஹர்சடி சில்வாவினால் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஒரு விழாவின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது காற்சட்டையை சரிசெய்யும் புகைப்படமும் இதேபோல பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version