Home முக்கியச் செய்திகள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எளிதான நாள் : மகிந்த தேசப்பிரிய விளக்கம்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எளிதான நாள் : மகிந்த தேசப்பிரிய விளக்கம்

0

ஜனாதிபதித் தேர்தலை (Presidential Election) அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து அந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு, சுமார் ஒரு வார கால அவகாசம் எடுத்துக் கொள்வதில் சிக்கல்கள் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் 24, 25 அல்லது அதனை அண்மித்த திகதிகளில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும்  தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு

அத்துடன் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எளிதான நாள் எது என்பது தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். ”ஜூலை மாதம் 17ஆம் திகதி தொடக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது. காரணம் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி போயா தினம் ஆகும். அதனடிப்படையில், செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் தேர்தலை நடத்த முடியும்.

எனினும், செப்டம்பர் 20ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவகாசம் உள்ளது.” என தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் மதிய நேர செய்தியில் காண்க ……


https://www.youtube.com/embed/9fA7xD2d8Zo

NO COMMENTS

Exit mobile version