இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என மக்கள் விரும்புவதை விட அரசியல் இராஜதந்திர ரீதியான கருத்துக்களே வலுப்பெற்றிருக்கின்றன.
இதற்கு இந்தியாவும் சற்றும் சளைத்தது அல்ல. குறிப்பாக இந்த தேர்தலில் தங்களது நிலைப்பாட்டையும் அவர்கள் நேரடியாகவே காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் விவகாரம் என்பது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு இந்தியா ஆரம்ப காலம் தொட்டு அதற்குரிய பணிகளை ஆற்றியிருக்க வேண்டும்.
எனினும், தனக்கு மிகப்பெரிய ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பது இந்தியாவிற்கு நன்கு விளங்கி வைத்திருக்கும் நிலையில் முன்னைய காலங்களை போல இந்தியா இரட்டை தோணியில் கால் வைத்துக் கொண்டிராமல் ஏதாவது ஒரு பக்கத்திற்கு சாய வேண்டிய தேவை ஏற்படும் என ஜனாதிபதி தேர்தலின் தற்போதைய நிலவரம் தொடர்பில் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், தேர்தலின் முடிவுகள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,