Home இலங்கை பொருளாதாரம் மகிந்த சிறிவர்தனவுக்கு கிடைக்கவுள்ள உயரிய பதவி

மகிந்த சிறிவர்தனவுக்கு கிடைக்கவுள்ள உயரிய பதவி

0

ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்று ஆளுநராக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன நியமிக்கப்பட உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச வர்த்தக நாளிதல் ஒன்றினை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு இந்தப் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புதிய பதவி

புதிய பதவிக்கு மகிந்த சிறிவர்தனவின் பெயரை அரசாங்கம் ஏற்கனவே ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது அறியப்படுகிறது.

நிதி அமைச்சகத்தின் துணைச் செயலாளரான அஜித் அபேசேகரவும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் இந்த உயர் பதவிக்கு விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும்,  அரசாங்கம் மகிந்த சிறிவர்தனவை தெரிவுசெய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த சிறிவர்தன முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கான மாற்று நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார்.

நிதிச் செயலாளர் புதிய பதவியைப் பொறுப்பேற்ற பிறகு, ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version