பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகரப்பகுதியான பொபினியில் ஈழத்தமிழர் ஒருவர் பிரெஞ்சு காவற்துறையின் துப்பாக்கிசூட்டில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயகத்தில் வன்னி மல்லாவியைச் சேர்ந்த இவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்த ஒருவரின் சகோதரர் எனவும் மனப்பிறள்வு பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுத்தவர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது வீட்டுக்கு அயலில் இருந்த இரண்டு வீடுகளை சேர்ந்தவர்களை இவர் ஆரம்பத்தில் கத்தியால் வெட்டியதாகவும் அந்த இடத்துக்கு சென்ற காவல்துறையினரையும் தன்னிடம் இருந்த இரண்டு கத்திகளால் அவர் அச்சுறுத்தியதையடுத்து காவல்துறையினர் அவரை சுட்டதால் இந்த துன்பியல் இடம்பெற்றது.
இந்த சம்பவம் இடம்பெற்ற சில மணிநேரத்தின் பின்னர் இந்த சம்பவத்துடன் எந்தவித தொடர்புகள் இல்லாத வகையில் பரிஸ் நகரில் பெரும் வன்முறைகள் கடந்த இரவு இடம்பெற்றன.
பரிஸ் சென்ற் ஜேர்மன் உதைபந்தாட்ட அணியின் வாகையர் வெற்றியை அடுத்து இந்த வன்முறைகள் இடம்பெற்ற நிலையில் இந்த விடயங்களை தழுவிவருகிறது செய்திவீச்சு
https://www.youtube.com/embed/-ddAB44jYjg
Source: https://ibctamil.com/article/sl-tamil-man-shot-dead-by-french-police-in-paris-1780221172
