Home விளையாட்டு இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

0

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

குறித்த போட்டியானது தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (13 நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இலங்கை அணி

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் சரித் அசலங்க (Charith Asalanka) அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றதுடன், கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) 51 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரொமாரியோ செப்பர்ட் (Romario Shepherd) 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி

பின்னர் 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து நிர்ணயித்த வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் பிராண்டன் கிங் (Brandon King) அதிகபட்சமாக 63 ஓட்டங்களையும், எவின் லூவிஸ் (Evin Lewis) 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இங்கை அணி சார்பில் மதீச பதீரண (Matheesha Pathirana) 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 03 போட்டிகள் கொண்ட இந்த ரி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதியும் மூன்றாவது போட்டி 17 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sl-vs-wi-1st-match-score-updates-details-1728843051

NO COMMENTS

Exit mobile version