எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது
தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்னும் இறுதியான மற்றும் உறுதியான முடிவை
எடுக்கவில்லை என அந்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அந்த அணியுடன் பயணிக்கவே
எதிர்பார்க்கின்றோம்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
தற்போதைய சூழ்நிலையில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும்
முடிவிலேயே இருக்கின்றோம்.
எனினும், கட்சி மாற்று முடிவை எடுத்தால் அது
பற்றியும் பரிசீலிக்க வேண்டி வரும்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவின் சகாக்கள் அறிவிப்புக்களை விடுத்திருந்தாலும், ரணில் இன்னும்
உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அந்த அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க விடுக்கும் வரை நம்ப முடியாது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றி பெறும் என்ற
அதிக நம்பிக்கை உள்ளது” என்றார்.