ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற
உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கட்சியின் தேசிய அமைப்பாளரும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தலைமையில் இன்று (13. 06.
2025) மாலை திருகோணமலை மாநகர சபைக்குச் சொந்தமான குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.
சத்தியப்பிரமாணம்
இந்தநிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.எஸ். உதுமான் லெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
ஜே.எம்.லாஹீர் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், திருகோணமலை
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற கௌரவ உறுப்பினர்கள் மற்றும்
கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சிப் போராளிகள்
என அனைவரும் கலந்து கொண்டனர்.
