Home இலங்கை அரசியல் மொட்டுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 3 எம்.பிக்கள் : வெளியான அறிவிப்பு

மொட்டுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 3 எம்.பிக்கள் : வெளியான அறிவிப்பு

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து பொதுஜன பெரமுன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன (S. M. Chandrasena), இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை

கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்திற்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரித்தமைக்காக அவர்களது கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் அகில இலங்கைக் நிறைவேற்றுக் குழு, செயற்குழு, அரசியல் குழு உறுப்புரிமை மற்றும் கட்சியின் தேசிய அழைப்பாளர் பதவி ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version