Home இலங்கை அரசியல் மக்களை ஏமாற்றும் வரவு – செலவுத் திட்டம்: கடுமையாக விமர்சிக்கும் மகிந்த அணி

மக்களை ஏமாற்றும் வரவு – செலவுத் திட்டம்: கடுமையாக விமர்சிக்கும் மகிந்த அணி

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் நிதியாண்டுக்கான
தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவுத் திட்டத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

மக்களை ஏமாற்றும் விதத்திலேயே வரவு –
செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என அந்தக் கட்சியின்
பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நேற்று (08.11.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

“குறுகிய காலப் பகுதிக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய
வேலைத்திட்டங்கள் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.

மக்களை ஏமாற்றும் திட்டம்

உறுதிமொழிகள்
இடம்பெற்றிருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டல் இல்லை.
இலக்கங்களைக் குறிப்பிடலாம். அதனை அடைவதற்குரிய வேலைத்திட்டமும் பாதீட்டில்
இல்லை.

ஆக மொதத்தத்தில் எவ்வித அடிப்படையும் இன்றி மக்களை ஏமாற்றுவதற்காக
முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டமே இதுவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version