புதிய இணைப்பு
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா பொதுஜன பெரமுன யாழ்.மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று(10) தாக்கல் செய்தது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ்,
கீத்நாத் காசிலிங்கம் உள்ளிட்டோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை வன்னி மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SlPP) தாக்கல் செய்துள்ளது.
வவுனியா (Vavuniya) மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (10) மதியம் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.
வன்னித்தேர்தல்
மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
முதன்மை வேட்பாளர்
இதன்போது வன்னியின் முதன்மை வேட்பாளர் துசாரி முத்துமாலி, மற்றும் ஏனைய
வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.