Courtesy: Sivaa Mayuri
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடுவது குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து (Ranil Wickramasinghe), முறையான அறிவிப்பை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்ற ஊகங்களும் பொதுஜன பெரமுன தரப்பில் இருந்து அதிகரித்து வருகின்றன.
எனினும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக அல்லது அடுத்த வாரங்களில் அத்தகைய தேர்தல் வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பொருத்தமான நடவடிக்கைகள்
இருப்பினும், அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், ஆணைக்குழு அது பற்றி கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் கடந்த வாரத்தில் நடைபெற்ற காலை உணவு சந்திப்பு ஒன்றின்போது, ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மற்றும் ஒரு தேர்தல் இடம்பெறும் என்று செய்தியை தெரிவித்திருந்தார் என்பதையும் அரசியல் தரப்புக்கள் இந்த இடத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.