Home முக்கியச் செய்திகள் மாவீரர் நாள் நினைவேந்தல் : மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் கைது

மாவீரர் நாள் நினைவேந்தல் : மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் கைது

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP ) நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா (Renuka Perera) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (05) காலை குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 வீட்டில் வைத்து கைது

ரேணுகா பெரேரா கொட்டிகாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கில் 244 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகளானது கடந்த காலங்களில் வெளிநாடுகளில் நடைபெற்ற வைபவங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


YOU MAY LIKE THIS

https://www.youtube.com/embed/nZBfPjpYOMEhttps://www.youtube.com/embed/LVh-i2ZKlz8

NO COMMENTS

Exit mobile version