Home இலங்கை அரசியல் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆதரித்த மொட்டுக் கட்சி

அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆதரித்த மொட்டுக் கட்சி

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய வேட்பு மனுக் கோரும் அரசாங்கத்தின் தீர்மானத்தை மொட்டுக் கட்சி ஆதரித்துள்ளது. 

இது தொடர்பில் மொட்டுக் கட்சி எனப்படும் பொதுஜன பெரமுண கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளதாவது,

இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்குப் புதிய வேட்புமனுக்கள் கோரும் அரசாங்கத்தின் தீர்மானம் வரவேற்கத்தக்கது.

நிபந்தனை

அதனை நாங்கள் ஆதரிக்கின்றோம். எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் மொட்டுக் கட்சி அதன் சொந்த சின்னத்திலேயே போட்டியிடும். எங்களது சின்னத்தை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாரில்லை.

எங்களுடன் இணையும் ஏனைய கட்சிகளும் மொட்டுக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் நிபந்தனையாக இருக்கும்.

எதிர்வரும் காலங்களில் கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளோம் என்றும் நாமல் ராஜபக்‌ச எம்.பி. தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version