Home இலங்கை அரசியல் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த ஊழியர்களை இடைநிறுத்திய இ.போ.ச

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த ஊழியர்களை இடைநிறுத்திய இ.போ.ச

0

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த ஆறு ஊழியர்களை இலங்கை போக்குவரத்துச் சபை இடைநிறுத்தியுள்ளது. 

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பிரதேச இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆறு ஊழியர்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஜனாதிபதித் ​தேர்தலுக்கான வேட்பு மனு தினத்தன்று ஹொரணை பிரதேச போக்குவரத்துச் சபை டிப்போவின் முகாமையாளர், உதவி முகாமையாளர் (நிர்வாகம்) மற்றும் நான்கு கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் அலுவல் நேரத்தில் போக்குவரத்துச் சபை பேரூந்து ஒன்றில் பொரளை வரை சென்றுள்ளனர். 

ஒழுக்காற்று விசாரணைகள்

குறித்த ஆறு பேரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு சென்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் தற்போது அவர்கள் ஆறுபேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் தொடரும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version