Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினராக நளீம் சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக நளீம் சத்தியப்பிரமாணம்

0

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஹம்மத் சாலி நளீம் (Muhammad Salih Naleem) நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் 

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (Sri Lanka Muslim Congress (SLMC)) கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த எம்பி பதவிக்கு அவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

எஸ். எம்.நளீம் இதற்கு முன்பு ஏறாவூர் நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/vs49KAZN4fw

NO COMMENTS

Exit mobile version